பால்வெளி அண்டம் (THE MILKYWAY GALAXY)

பால்வெளி அண்டம் என்பது, பல கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகும். கிராமத்துப் பகுதிகளில் உயரமான இடங்களிலிருந்து இரவு வானத்தைப் பார்த்தால், உங்களால், பால்வெளி அண்டத்தைப் பார்க்க முடியும்.

பால்வெளி அண்டம் :

இந்தப் பால்வெளி அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையானது, நமது பூமியில் உள்ள, மண் துகள்களின் எண்ணிக்கையை விட 10,000 மடங்கு அதிகம் ஆகும். நமது சூரியனும் அதில் ஒரு நட்சத்திரமாகவே உள்ளது. நமது பால்வெளி அண்டத்தில், 10,000 முதல் 40,000 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

Image:HDwalpapers.net







நீங்கள் இதுவரை பார்த்த, பால்வெளி அண்டத்தின் எந்தப் புகைப்படமும் உண்மையானது அல்ல. ஏனென்றால், ஒரு வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு, அந்த வீட்டின் ஒட்டுமொத்த அமைப்பையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாதல்லவா. ஆனால், அருகில் உள்ள வீடுகளைப் பார்ப்பதன் மூலம், நமது வீட்டின் அமைப்பை ஓரளவு ஊகிக்க முடியும்.  அப்படிப்பட்ட ஊகத்தில் உருவாக்கப்பட்டதுதான், பால்வெளி அண்டத்தின் புகைப்படம். 

மேலும், இந்தப் பால்வெளி அண்டத்தில்,  நமது பூமியைப் போலவே, உயிர் வாழ்வதற்குத் தகுந்த வெப்பநிலையிலும், தண்ணீருடனும், கிட்டத்தட்ட 100 கோடி கிரகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

நமது பால்வெளி அண்டதைப் போல, பல கோடி கணக்கான மற்றும் பில்லியன் கணக்கான விண்மீன் மண்டலங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன. இவை, பல விண்மீன் திரள்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

நமது பால்வெளி அண்டமானது "Virgo" எனப்படும் விண்மீன் திரளின் ஒரு பகுதியாகவே உள்ளது.

 நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் "Sagittarius A" எனும் ஒரு கருந்துளை உள்ளது. அதன் நிறையானது, நமது சூரியனை விட 40 லட்சம் மடங்கு அதிகமாகும்.

Sagittarius A 
Image: wikimedia commons

ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணம் செய்தல் கூட, பால்வெளி அண்டத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்ல, ஒரு லட்சம் வருடங்கள் ஆகும். ஏனெனில், பால்வெளி அண்டத்தின் விட்டம் ஒரு லட்சம் ஒளியாண்டுகள்! பூமி, சூரியனைச் சுற்றி வருவது போல, ஒட்டுமொத்த சூரியக் குடும்பமும் பால் வெளி அண்டத்தைச் சுற்றி வருகின்றது.

பால்வெளி அண்டத்தில் சூரியக்குடும்பம் :

பால் வெளி அண்டத்தைச் சுற்றி வரக்கூடிய நமது சூரிய குடும்பத்தின் வேகமானது 8,28,000 km/hour ஆகும். பால்வெளி அண்டத்தில் நமது சூரிய குடும்பம், இப்போது இருக்கும் இடத்தில், சென்றமுறை இருந்தபோது, டைனோசர்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. சூரியக் குடும்பம்,  உருவானதிலிருந்து இன்று வரை, 20 முறை மட்டுமே நமது பால்வெளி அண்டத்தைச் சுற்றி வந்துள்ளது.

பால்வெளி அண்டம், அதன் மையத்தைப் பொறுத்து சுழன்றுகொண்டிருக்கிறது. அதன் சுழலும் வேகமானது அதன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இருப்பதில்லை.

ஒரு வட்ட வடிவ தகட்டை எடுத்துக்கொண்டு, அதன் மையத்திற்கு அருகிலும், அதன் எல்லைப் பகுதியிலும் ஒரு புள்ளியை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த தகட்டை, அதன் மையத்தை பொறுத்து சுழற்றும்போது அதன் மையத்திற்கு அருகில் வைக்கப்பட்ட புள்ளி மெதுவாகவும், அதன் எல்லைப் பகுதியில் வைக்கப்பட்ட புள்ளி வேகமாகவும் சுழல்வதை காணலாம்.

இதுபோலவே, பால்வெளி அண்டத்திலும், அதன் மையத்தின் அருகில் உள்ள பொருள்கள் மெதுவாகவும், அதன் எல்லையில் உள்ள பொருள்கள் வேகமாகவும் சுழல்கின்றன. இந்த வேகமானது, ஒவ்வொரு பொருளும், பால்வெளி அண்டத்தின் மையத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதனைப் பொறுத்து அமைகிறது. தொலைவு அதிகரிக்க அதிகரிக்க, பால்வெளி அண்டத்தின் சுழற்சி வேகமும் ஒரு மாறாத விகிதத்தில் அதிகரிக்கிறது.

நமது சூரியக் குடும்பம் இருக்கும் பகுதியில், வினாடிக்கு 210 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பால்வெளி அண்டம், சுழன்று கொண்டிருக்கிறது. அதாவது, சூரியக் குடும்பத்தின் வேகமான 800000 km/hour என்ற வேகத்தில் சுழல்கிறது.

பால்வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து, நமது சூரியக் குடும்பம் எவ்வளவு தொலைவில் உள்ளதோ, அதே தொலைவில் மற்றொரு நட்சத்திரம் இருந்தால், அதன் வேகமும், நமது சூரியக்குடும்பத்தின் வேகமும் சமமாகவே இருக்கும்.

பால்வெளி அண்டத்தின் அமைப்பு 

இதுவரை, நான்கு வடிவங்களிலான  விண்மீன் மண்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை முறையே,

1) நீல்வட்ட வடிவம் 

Image: rawpixel

2) சுருள் வடிவம் 

Image: wikimedia commons

3) வில்லை வடிவம் (Lenticular)

Image: picryl

4) ஒழுங்கற்ற வடிவம் 

Image: rawpixel

இவற்றில், நமது பால்வெளி அண்டமானது, "சுருள் வடிவ" அமைப்பை கொண்டுள்ளது.

பால்வெளி அண்டம் - எதிர்காலத்தில் :

பால்வெளி அண்டமானது, ஆரம்ப காலங்களில், தற்போதுள்ள அமைப்பில் இல்லை. பல, சிறிய விண்மீன் மண்டலங்களைத் தன்னுள் இழுத்துக்கொண்டாதால் தான், தற்போதுள்ள அமைப்பை பெற்றது. மேலும் இது, வினாடிக்கு 583 கிலோ மீட்டர் என்ற வேகத்தில், அருகில் இருக்கும் "ஆன்ட்ரோமேடா" என்னும் விண்மீன் மண்டலத்தை  நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 450 கோடி வருடங்களில் இந்த இரண்டு விண்மீன் மண்டலங்களும் மோதிக் கொள்ளும்.

Image of collision of milky way and andromeda galaxies
Image: pixabey

இந்த மோதலில் ஆண்ட்ரோமேடா விண்மீன் மண்டலமானது நமது பால்வெளி அண்டத்தை விழுங்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. அல்லது, இவற்றில் உள்ள நட்சத்திரங்கள் வெளிநோக்கி வீசி எறியப்படவும் வாய்ப்புள்ளது.

ஆனால், அவற்றில் உள்ள நட்சத்திரங்கள் மோதிக்கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், அவற்றில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரங்களும், பல ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன. மேலும், பால்வெளி அண்டத்தில் உள்ள அனைத்து விண்மீன்களும், அதன் 10 % இடத்தை மட்டுமே அடைத்துள்ளன. மீதமுள்ள 90% இடமும் "Dark matter" எனப்படும், கரும்பொருளால் நிறைந்துள்ளது. இதே போல் தான் ஆண்ட்ரோமேடா விண்மீன் மண்டலத்திலும்.

நமது பால்வெளி அண்டத்தில், ஒரு வருடத்திற்கு 15-20 விண்மீன்கள் அழிக்கப்படுகின்றன. மேலும், 7 புதிய விண்மீன்கள் உருவாக்கப்படுகின்றன.

சூரியகுடும்பத்தின் இருப்பிடம் :

நமது பால்வெளி அண்டத்தின் அமைப்பில், அதற்கு நான்கு கைகள் உள்ளன. அவை Norma arm, Scutum centaurus arm, Sagittarius arm, Pernicious arm, ஆகியவை ஆகும். இவற்றுடன் orian arm என்னும் ஒரு சிறு பகுதியும் உள்ளது.

Image: wikimedia commons

இந்த orian arm எனும் பகுதியில் தான் நமது சூரிய குடும்பம் அமைந்துள்ளது.
குறைந்தபட்சம் 2000 ஒளியாண்டுகள் தொலைவைக் கடந்து சென்றால் தான், orian arm எனும் பகுதியிலிருந்தே நம்மால் வெளியேற முடியும்.
எனவே பால்வெளி அண்டதை விட்டு வெளியேறுவதெல்லாம் சாத்தியமாற்றது.
எதிகாலத்தில் இது சாத்தியமாகலாம்.

*******

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post