![]() |
Image: pixabay |
நாம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றல், நிலை ஆற்றலாகவோ அல்லது இயக்க ஆற்றலாகவோ இருக்கலாம். நிலையாக ஓரிடத்தில் நிற்கும் பொருளினுடைய ஆற்றல், நிலையாற்றல் (potential energy) என்றும், இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு பொருளினுடைய ஆற்றல் இயக்கஆற்றல் (kinetic energy) என்றும் அழைக்கப்படுகின்றன.
அந்த வகையில், ஒளிக்கு நிலை ஆற்றல் இல்லை. ஏனென்றால் ஒளி ஓரிடத்தில் நிற்பதில்லை. இது இயக்க ஆற்றலை மட்டுமே கொண்டுள்ளது. இந்த இயக்க ஆற்றலானது அலை வடிவத்தில் செல்கிறதா அல்லது துகள் வடிவத்தில் செல்கிறதா என்பதனை இங்கு விரிவாகக் காண்போம்.
ஒளியின் அலை வடிவம் :
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நியூட்டன் அவர்கள், ஒளி என்பது துகள் வடிவிலேயே பரவுகிறது என்று கூறினார். அந்தத் துகள் மிகவும் சிறியதாக இருந்தால், அது நீல நிறத்திலும், பெரியதாக இருந்தால் அது சிவப்பு நிறத்திலும் இருக்கும் என்று கணித்திருந்தார். அதே காலகட்டத்தில் வாழ்ந்த Christiaan Huygenes எனும் இயற்பியலாளர், ஒளி என்பது அலை வடிவிலேயே பரவுகிறது என்று கூறினார். அவரைப் பொறுத்தவரையில் ஒளியானது, அது பரவும் திசைக்குச் செங்குத்தான திசைகளில் மேலும் கீழும், அலைவுகளை (oscillations) ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது என்று நம்பினார்.
![]() |
Image: wikimedia commons |
![]() |
Image: wikimedia commons |
இவருடைய கூற்றை உண்மையாகும் வகையில் 1800 களில் Thomas Young எனும் பல்கலை ஆய்வாளர், ஒரு சோதனையைச் செய்தார். இந்தச் சோதனையில் ஒரு ஒளிக்கதிரானது, மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, சில பிளவுகளின் வழியே புகுந்து செல்கிறது. இங்கு அந்தப் பிளவுகள், ஒளியினுடைய அலைநீளத்தை விடச் சிறியதாக இருக்க வேண்டும். இந்த சோதனையின் முடிவில் அவர், ஒருசில இடங்களில் மட்டும் ஒளியானது, பிரகாசமாகவும், மற்ற இடங்களில் இல்லாமலும் இருப்பதைக் கவனித்தார். இது, ஒரு துகளினால் சாத்தியமே இல்லை. |
உதாரணமாக, ஒரு பந்தினை, அதனை விடக் குறைவான விட்டம் உடைய ஒரு துளையை நோக்கி நாம் வீசும் போது, அந்தப் பந்தினால், அந்தத் துளையின் வழியாகப் புகுந்து செல்ல முடியாது. ஆனால் ஒரு தண்ணீர் குழாயிலிருந்து நீரினை வேகமாக அந்த சிறிய துளையின் வழியே செலுத்தும் பொழுது, இந்த நீரினால் நேரான பாதையில் செல்ல முடியாவிட்டாலும், அந்தத் துளையினுடைய விளிம்புகளின் வழியாக, புகுந்து அடுத்த பகுதிக்குச் சென்று விடும்.
இது போலத்தான், இந்தச் சோதனையிலும் நிகழ்ந்துள்ளது. ஒருவேளை ஒளியானது ஒரு துகளாக இருந்திருந்தால், அதனால் கண்டிப்பாக அந்தப் பிளவைத் தாண்டிப் பயணித்திருக்க முடியாது. இவ்வாறாக ஒளியானது, துகள் வடிவில் பரவவில்லை, அலை வடிவில் தான் பரவுகிறது என்று Thomas Young நிரூபித்தார்.
ஒருசில இடங்களில் மட்டும், அந்த ஒளியானது பிரகாசமாகத் தெரிந்ததற்கான காரணத்தை, கீழுள்ள புகைப்படம் விளக்குகிறது.
இரண்டு அலைகள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுது, மேலுள்ளது போல் தான் அவை பரவும். எனவேதான், சோதனையின் முடிவில் சில இடங்களில் மட்டும் ஒளியானது பிரகாசமாகத் தெரிந்தது.
ஒளியின் துகள் வடிவம்:
Thomas Young அவர்களினுடைய சோதனைக்குப் பிறகு அனைவரும், ஒளி என்பது அலை வடிவத்தில் தான் பரவுகிறது என்று நம்பத் தொடங்கினர். அவரின் பிறகு, பிரபல இயற்பியலாளரான Albert Einstein அவர்கள், ஒளியைப் பற்றிய தனது சிந்தனையை குவாண்டம் அளவில் ஓடவிட்டார்.
1905 ஆம் ஆண்டில் ஒளிக்கு, துகள் வடிவமும் உள்ளது என்பதனை ஒரு சோதனையாக நிகழ்த்திக்காட்டினார். அந்தச் சோதனையின் பெயர் ஒளிமின் விளைவு (the photoelectric effect) ஆகும்.
![]() |
Image: wikimedia commons |
- ஒளிக்கதிர்கள் படுவதற்கும் எலக்ட்ரான்கள் வெளியேற்றப்படுவதற்கும் இடையில் நேர இடைவெளியே இல்லை.
- ஒளிக்கதிரினுடைய செறிவினை (intensity) அதிகரிக்கும் போது வெளியேறிய எலக்ட்ரான்களினுடைய இயக்க ஆற்றலில் எந்த வித மாற்றமும் இல்லை.
- ஒளிக்கதிரினுடைய அதிர்வெண்ணை (frequency) அதிகரிக்கும் பொழுது, எலக்ட்ரான்களின் இயக்க ஆற்றல் அதிகரித்திருந்தது.
ஒருவேளை ஒளியானது அலை வடிவில் இருந்திருந்தால்.....
- ஒளி அலைகளிலிருந்து ஆற்றலைப் பெற்றுக்கொண்டு எலக்ட்ரான்கள் வெளியேறுவதற்கு, கண்டிப்பாகக் குறிப்பிட்ட கால அளவை எடுத்துக் கொள்ளும்.
- மேலும் ஒளியினுடைய செறிவினை அதிகரிக்கும் போது, எலக்ட்ரான்களினுடைய இயக்க ஆற்றலும், அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்க வேண்டும்.
இவை எதுவும் சரியாக நிகழாததால், ஒளியானது ஆற்றல் பொதிகளின் (energy pockets) வடிவத்தில் பரவுகிறது என்று ஐன்ஸ்டீன் அவர்கள் நிரூபித்தார். இந்த ஆற்றல் பொதிகள்தான் பிற்காலத்தில் ஃபோட்டான்கள் என்று அழைக்கப்பட்டன.
Thomas Young அவர்களினுடைய சோதனைப்படி ஒளியானது அலை வடிவத்தில் பரவுகிறது. ஆனால், Albert Einstein அவர்களினுடைய சோதனைப்படி ஒளியானது துகள் வடிவில் பரவுகிறது. இந்த இரண்டு சோதனைகளும் சரியானவையே!
எனவே, ஐன்ஸ்டீன் அவர்கள், ஒளிக்கு அலை வடிவமும் உண்டு, துகள் வடிவமும் உண்டு என்று முடிவெடுத்தார்.
இவரினுடைய ஒளிமின் விளைவுக்காக 1921 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்.
ஆற்றலின் நிறை வடிவம்:
ஃபோட்டான்கள் எனும், ஆற்றல் பொதிகளுக்கு நிறை வடிவம் உள்ளதா என்பது கொஞ்சம் வித்தியாசமான கேள்வி ஆகும்.
![]() |
Image: picryl |