மர்மங்கள் நிறைந்த மரியானா

 

 Image: Wikimedia commons 

உலகில் உள்ள கடல் பகுதிகளில் இதுவரை 5% மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 95% கடல் பகுதியானது, அறிவியலாளர்களுக்கு ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான், உலகின் தற்போதைய ஆழமான பகுதியாக கருதப்படக் கூடிய, மரியானா அகழி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை விட, குறைவான அளவில் தான் மரியானா அகழி, ஆராயப்பட்டுள்ளது. 

இந்தப் பகுதிக்கு இதுவரை 23 மனிதர்கள் மட்டுமே சென்றுள்ளனர். இது, உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியானது, மேற்கு பசிபிக் கடல் பகுதியில் இருக்கக்கூடிய "மரியானா" எனும்  தீவிலிருந்து, கிழக்குப் பகுதியில் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த அகழியானது, 2500 கிலோ மீட்டர் நீளத்தையும் 69 கிலோமீட்டர் அகலத்தையும் கொண்டு, 'பிறை நிலா' வடிவில் உள்ளது. 

 Image: Wikimedia Commons 

மரியானா அகழியின், மிகவும் ஆழமான பகுதிக்கு  Challenger Deep  எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடல் பரப்பிலிருந்து இதனுடைய ஆழம் 11.7 கிலோ மீட்டர் ஆகும். இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், உலகின் மிகப்பெரிய மலைப்பகுதியான இமயமலையின் உயரம் கூட 8 கிலோமீட்டர் மட்டுமே. 

இந்தப் பகுதியில் வெப்பநிலையானது 1-4°C அளவில் மட்டுமே இருக்கும். ஆனால் இந்தப் பகுதியில் இருக்கும் அழுத்தம், இங்கு இருப்பதைவிட 1071 மடங்கு அதிகமாகும். உங்கள் தலையில் 150 யானைகளை நிற்க வைத்தால் எவ்வளவு அழுத்தத்தை உணர்வீர்களோ, அந்த அழுத்தத்தை இந்தப் பகுதியில் நீங்கள் உணர்வீர்கள். 

நம் அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில், இந்தப் பகுதியில் கூட உயிரினங்கள் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! 

கடலில், மூன்று கிலோ மீட்டர் ஆழம் வரையில் மட்டுமே சூரிய ஒளியினால் செல்ல முடியும். இந்தப் பகுதியில் வாழும் சில உயிரினங்கள், ஒளியினைத் தானாகவே உருவாக்கும் தன்மையுடையதாகவும் உள்ளன. இந்தப் பகுதியில் வாழும் Rosetta வகையைச் சேர்ந்த ஜெல்லி மீன்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. 

Image: wikimedia commons 
இந்த மரியானா அகழியில், 450°C அளவில் கொதிக்கும் நீரினை வெளியேற்றக் கூடிய black smokers  எனும் வெப்ப நீர்த்துவாரங்களும் உள்ளன. ஆனால் இந்த நீரானது ஆவியாக்கப்படுவதில்லை. ஏனென்றால் இந்தப் பகுதியில், நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

இதே போல் இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய, white smokers எனும் வெப்ப நீர் துவாரங்களில் இருந்து, கார்பன் டை ஆக்சைடு வாயுவானது திரவ வடிவில் வெளியேற்றப்படுகிறது. இந்தப் பகுதியானது, உயிர்கள் உருவாக்கத்திற்கு ஏற்ற ஒரு பகுதியாகும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

Image: flickr

இந்தப் பகுதியில் சிப்பிகள் வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கே இருக்கக்கூடிய அதிகமான அழுத்தத்தால், அவற்றின் ஓடுகள் உடையாமல் இருப்பது, ஆச்சரியத்தைத் தருவதாகவே உள்ளது. இவை, பூமியின் மேற்பரப்பில் இருப்பதை விட, அளவில் மிகவும் பெரியதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

மரியானா அகழியின் அடியில், மண்ணால் ஆன தரைப்பகுதியே இல்லை. இதன் அடிப்பகுதியில், இறந்த உயிரினங்களின் உடல்கள் மற்றும் நுண்ணுயிர்கள் போன்றவை மட்டுமே இருக்கும். அவற்றின் மேல், சுமார் ஒரு சென்டிமீட்டர் அடர்த்தியில் பாக்டீரியா, அமீபா போன்ற நுண்ணுயிர்கள் படர்ந்துள்ளன. எனவேதான் இந்தப் பகுதி hadal zone என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கப் புராணங்களில் hadal zone என்பது நரகத்தின் கடவுளான Hadas என்பவரின் இருப்பிடம் ஆகும்.

மரியானாவின் வரலாறு: 

உலகின் ஆழமான இந்தப் பகுதியானது, 1875 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அவர்கள், இதன் ஆழம் 8 கிலோமீட்டர் வரையில் இருக்கலாம் என்று கணித்திருந்தனர்.

பிறகு, மீண்டும் ஆங்கிலேயர்கள் 1951 ஆம் ஆண்டில், HMS Challenger எனும் கப்பலில், மரியானா அகழிக்குச் சென்று, Eco sound system எனும் அமைப்பைப் பயன்படுத்தி, மீண்டும் அதன் ஆழத்தைக் கணக்கிட்டனர். இந்த ஆராய்ச்சியில், அவர்கள், மரியானா அகழியின் ஆழமானது, சுமார் 11 கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என முடிவெடுத்தனர். இந்தக் கப்பலுடைய பெயரின் காரணமாகவே, மரியானா அகழியின் ஆழமான பகுதிக்கு, "Challenger Deep" என்று பெயரிடப்பட்டது.

1960 ஆம் ஆண்டில், Jacques Piccard மற்றும் Don walsh என் இரு கடலியல் ஆய்வாளர்கள், Bathyscape எனும், நீர்மூழ்கிக் கப்பலில், முதன் முதலில் Challenger Deep எனும் பகுதியை அடைந்தனர். 

Image: PICRYL

இந்தப் பகுதியை அடைவதற்கு அவர்களுக்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஆயிற்று. அங்கே 20 நிமிடங்கள் வரை தங்கினர். மேலும், அவர்கள் அங்கே,  தட்டையான வடிவத்தில் ஒரு மீன் இருப்பதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர். ஆனால் அந்த சமயத்தில், பல விஞ்ஞானிகள் இதனை நம்பவில்லை. ஏனென்றால் அந்தப் பகுதியில் இருக்கும் அழுத்தத்திற்கு, உயிரினங்கள் அங்கே வாழ்வது மிகவும் கடினமான ஒன்றாகும்.

பிறகு 2012 ஆம் ஆண்டில், பிரபல இயக்குனரான James Cameron அவர்கள், தனது, 24 அடி நீளம் கொண்ட ஒரு நீர் மூழ்கிக்கப்பலில், Challenger Deep  என்னும் பகுதியை அடைந்தார். இந்தப் பயணத்தில், மரியானா அகழியில் சுமார் 10,908 மீட்டர் ஆழத்திற்குச் சென்றார். 

இந்தப் பயணத்திற்குப் பிறகு, அவர், இதுவரை அந்தத் தனிமையை தான் உணர்ந்ததே இல்லை என்றும் வேறு ஒரு கிரகத்திற்குச் சென்று வந்தது போல் இருந்தது என்றும் கூறினார். ஆனால் அந்தப் பகுதி அமைதியாக இல்லை. சில வித்தியாசமான சத்தங்களும் கேட்டதாக அவர் கூறினார். அப்பகுதியில் வாழக்கூடிய உயிரினங்களின் சத்தங்களாகக் கூட அவை இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். (இவர், அப்பகுதிக்குச் சென்ற காலகட்டத்தில் அங்கே உயிரினங்கள் வாழ்வது நிரூபிக்கப்பட்டிருந்தது.)

பிறகு 1919 ஆம் ஆண்டில் தொழிலதிபரான Victor Vescovo அவர்கள், மரியானா அகழிக்குள் ஒரு பயணத்தை மேற்கொண்டார். மரியானா அகழியின் மிகவும் ஆழமான பகுதியை அடைந்தவர் இவரே. சுமார் 10927 மீட்டர்கள் வரையிலான ஆழத்திற்கு இவர் சென்றார். 

இன்று வரையில் 200க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த  நுண்ணுயிர்கள் மரியானா அகழியில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் Mariana snailfish எனும் மீன் தான், விஞ்ஞானிகளுக்கு அதிகப்படியான ஆச்சரியத்தைத் தந்துள்ளது. ஏனென்றால் இந்த மீன்களுக்கு செதில்களே கிடையாது. மேலும் இவை மரியானா அகழியில், மிகவும் ஆழமான பகுதியில் வாழ்கின்றன.  ஒருவேளை நாம் அந்தப் பகுதிக்கு நீந்திச் சென்றால், அங்கே இருக்கக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக, நம் உடலில் உள்ள செல்கள் கரைந்து போகவும் வாய்ப்புள்ளன என்று கூறப்படுகிறது. 

ஆனால், அத்தகைய அழுத்தத்திலும், mariyana sneilfish போன்ற, மீன் வடிவிலான உயிரினங்கள் வாழ்வது ஆச்சரியத்தையே அளிக்கிறது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமளிக்கக்கூடிய ஒன்றை, இந்தப் பகுதியில் நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவைகள், மனிதர்களால் கடலில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள், மற்றும் சில வேதிப்பொருள்கள் போன்றவையே ஆகும்.

இவற்றை உண்பதனால், அப்பகுதியில் வாழக்கூடிய பல உயிரினங்கள், அழிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்று, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 😥


Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post