Image: DevainArt |
இதுவரையில், பூமியைப் போலவே உயிர்வாழத் தகுதியுள்ள பல கிரகங்களை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தாலும், அவை அனைத்தும், பல ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில்தான் உள்ளன. ஆனால் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் நாளில், தெற்கு ஐரோப்பிய கண்காணிப்பகத்தில் உள்ள HARPS-N எனும் கருவியால் கண்டுபிடிக்கப்பட்ட, super-Earth என்று அழைக்கப்படக்கூடிய, GLIESE 667Cc (கிளீஸ் 667Cc) எனும் கிரகம் தான், மனிதர்கள் இதுவரை கண்டுபிடித்ததிலேயே, சூரியக் குடும்பத்திற்கு மிகவும் அருகில் இருக்கக்கூடிய, உயிர்கள் வாழத் தகுந்ததாகக் கருதப்படும் ஒரு கிரகம் ஆகும். இது பூமியிலிருந்து 22.18 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
அதாவது, நீங்கள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் கூட, இந்த கிரகத்தை அடைவதற்கு 22.18 வருடங்கள் ஆகும். இந்த கிரகத்தின் நட்சத்திரம் GLIESE 667C என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரமானது, ஒரு மும்மடி- விண்மீன் தொகுப்பில் (tertiary star system) ஒரு விண்மீன் ஆகும்.
இந்த நட்சத்திரத்தைக் கிட்டத்தட்ட ஆறு கிரகங்கள் வலம் வருகின்றன. இந்த ஆறு கிரகங்களில் GLIESE 667Ccc, GLIESE 667Cf மற்றும் GLIESE 667Ce எனும் மூன்று கிரகங்கள், உயிர்கள் வாழத் தகுந்த வெப்பநிலையை கொண்டுள்ள, The habitable zone எனும் பகுதியில் உள்ளன. இவற்றில், GLIESE 667Cc எனும் கிரகம் தான், உயிர்கள் வாழ்வதற்கு அதிகளவு வாய்ப்புள்ள ஒரு கிரகமாகக் கருதப்படுகிறது. இதன் ஆரம், பூமியை விட1.8 மடங்கு அதிகமாகும். இந்த கிரகம் இதன் நட்சத்திரத்தை முழுவதுமாக சுற்றி வருவதற்கு 28 நாட்களை எடுத்துக் கொள்ளும்.
இந்த கிராகத்தைப் எனும் கிரகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இதன் நட்சத்திரத்தைப் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.
GLIESE 667C :-
GLIESE 667Cc:-
இந்த கிரகமும் பூமியைப் போலவே, பாறைகளால் நிரம்பிய ஒரு கிரகம் (Rocky planet) ஆகும். நமது கிரகத்திலிருந்து பார்க்கும்பொழுது தெரியக்கூடிய சூரியனின் அளவைவிட இந்த கிரகத்திலிருந்து பார்க்கும் பொழுது தெரியக்கூடிய இதனுடைய சூரியனின் அளவு, மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.
இந்தக் கிரகத்தின் நிறையானது பூமியில் நிறையை விட 4.5 மடங்கு அதிகம் ஆகும். இந்தக் கிரகம், உயிர்கள் வாழத் தகுதியுள்ள ஒரு கிரகமாகக் கருதப்படுவதற்குக் காரணம், இதன் வளிமண்டலமே. ஏனெனில் இதன் வளிமண்டலம், பூமியின் வளிமண்டலத்துடன் ஒத்துப் போகிறது. இங்கே, நீரானது திரவ நிலையில் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலை, -36°C முதல் 10°C என்ற அளவில் இருக்கும்.
இந்த கிரகம், GJ667Cc, HR6426Cc, HD156384Cc என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
குறைகள்:-
Image: wikimedia commons |
GLIESE 667Cc எனும் உலகத்திலும், ஒருபக்கம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும். இந்தப் பகுதியில் வெப்பநிலையானது மிகவும் குறைவாகவும்(-36°C), மற்றொரு பகுதியில் மிகவும் அதிகமாகவும் (10°C) இருக்கும். எனவே இந்த இரண்டு பகுதிகளுக்கும் நடுவில் இருக்கக்கூடிய Terminator line எனும் பகுதியில் மட்டுமே உயிர்கள் வாழத் தகுந்த வெப்பநிலை இருக்கலாம். பூமியின் மேற்பரப்பில் உள்ள சராசரி வெப்பநிலை 15°C ஆகும்.